சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகும் என பொதுமக்கள் கவலை

சிவ­கங்கை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் நீடித்து வரும் கன­மழை கார­ண­மாக குடி­யி­ருப்புப் பகுதி­களை மழைநீர் சூழ்ந்­துள்ளது.

இந்­நி­லை­யில், பாலாற்று படுகை­யில் உள்ள ஆக்­கி­ர­மிப்­பு­கள், சீமைக் கரு­வேல மரங்­களை அகற்றா­விட்­டால் வெள்ளநீர் ஊருக்­குள் புகுந்­து­வி­டும் என சிவ­கங்கை மாவட்­டம், சிங்­கம்­பு­ணரி பகுதி மக்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

அங்­குள்ள திருங்­காக் கோட்டை, முட்­டாக்­கட்டி, பிரான்­மலை, எஸ்.வி.மங்கலம், காளாப்­பூர், உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக மழை வெளுத்­துக் கட்­டி­யது. இத­னால் மழை நீர் வெள்ளம்­போல் ஓடி­ய­தாக அப்பகுதி மக்­கள் கூறினர்.

இந்­நி­லை­யில் சிங்­கம்­பு­ணரி ஒன்­றிய பகு­தி­களில் உள்ள நீர் நிலை­களுக்­குச் செல்­லும் வாய்க்­கால்­கள் சரி­வர பரா­ம­ரிக்­கப்­ப­ட­வில்லை என பொது­மக்­கள் புகார் எழுப்பி உள்­ள­னர். பரா­ம­ரிப்பு இல்­லா­த­தால் மழை நீரை சேமிக்க இய­ல­வில்லை என்றும் சிங்­கம்புணரி வழி­யாக ஓடும் பாலாற்­றில் கடு­மை­யான சீமைக்­க­ருவேல மரங்கள் ஆக்கி­ர­மித்­துள்­ளன என்­றும் கிராம மக்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

இதன் கார­ண­மாக பாலாற்று படுகை அரு­கில் உள்ள அணைக்­கரைப்­பட்டி, ஓசா­ரிப்­பட்டி, பட்ட கோவில் குளம் உள்­ளிட்ட பல கிரா­மங்­க­ளுக்­குள் காட்­டாற்று வெள்­ள­நீர் புகுந்­து­வி­டும் ஆபத்து உள்­ள­தாக அவர்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

"குறிப்­பாக அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் அடுத்­தக்­கட்ட பரு­வ­மழை தொடங்­கும். அப்­போது காட்­டாற்று வெள்­ளம் ஏற்­படும் என்­ப­தால், துறை சார்ந்த அதி­காரி­கள் பாலாற்று படு­கை­யில் உள்ள ஆக்­கி­ர­மிப்­பு­கள், சீமைக் கரு­வேல மரங்­களை அகற்ற வேண்­டும்," என பொதுமக்கள் கோரி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!