ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிப்பு; கடற்படைக்குப் புதிய கொடி வெளியீடு

ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிப்பு; கடற்படைக்குப் புதிய கொடி வெளியீடு

1 mins read
997f012c-73ba-4d23-879b-b9229d3b3682
ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் திறமைக்குச் சான்று என்று கூறிய பிரதமர் கடற்படையின் புதிய கொடியையும் வெளியிட்டார். படங்கள்: இந்திய ஊடகம் -
multi-img1 of 3

கொச்சி: இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட ஐஎன்­எஸ் விக்­ராந்த் விமா­னந்­தாங்­கிக் கப்­ப­லைப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்­தார். கேரள மாநி­லத்­தின் கொச்சி துறை­மு­கத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் உரை­ஆற்­றி­னார்.

தமது உரை­யில், "விக்­ராந்த் கப்­பல் ஒரு இயந்­தி­ரம் அல்ல. இது இந்­தி­யா­வின் திற­மையை உல­கிற்கு வெளிப்­ப­டுத்­தும் நற்­சான்று; நாட்­டிற்­கும் கடற்­ப­டைக்­கும் கிடைத்த பெருமை," என்­றார் அவர். எந்­தச் சவா­லை­யும் எதிர்­கொள்­ளும் திறன் இந்­தி­யா­விற்கு இருப்­பதை இது உணர்த்­து­வ­தாக அவர் கூறி­னார்.

"ஐஎன்­எஸ் விக்­ராந்த் விமா­னந்­தாங்­கிக் கப்­பலை ஒரு மிதக்­கும் விமான நிலை­யம் அல்­லது மிதக்­கும் நக­ரம் என்­று­கூ­டச் சொல்­ல­லாம். அந்த அள­விற்கு இந்­தக் கப்­ப­லில் அதி­ந­வீன வச­தி­கள் உள்­ளன," என்று திரு மோடி குறிப்­பிட்­டார்.

கப்­ப­லில் மின்­சா­ரம் தயா­ரிக்­கும் கரு­வி­கள் இருப்­ப­தா­கக் கூறிய பிர­த­மர், இதன்­மூ­லம் 5,000 வீடு­களுக்கு மின்­சா­ரம் வழங்­க­மு­டி­யும் என்று தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில் இந்­தி­யக் கடற்­ப­டை­யின் கொடி­ மாற்­றப்­பட்டு புதிய கொடி இன்று பிர­த­ம­ரால் வெளி­யி­டப்­பட்­டது. புதிய கொடி­யில் மாமன்­னர் சிவா­ஜி­யின் இலச்­சினை இடம்­பெ­று­வ­தா­கக் கூறிய அவர், பழைய கொடியை மாற்­று­வ­தற்கு உந்­து­சக்­தி­யாக விளங்­கிய மாமன்­னர் சிவா­ஜிக்கு ஐஎன்­எஸ் விக்­ராந்த் கப்­பலை அர்ப்­ப­ணிப்­ப­தா­கக் கூறி­னார்.

262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம் கொண்ட இந்­தக் கப்­பல் 20,000 கோடி ரூபாய் செல­வில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.