முட்டை விலை 50 காசுகள் உயர்வு

முட்டை விலை 50 காசுகள் உயர்வு

1 mins read
4be7d3f0-1b21-4eb9-91bb-ce65cf919d50
-

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 50 காசுகள் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமாக நாமக்கல் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேலான கோழிப் பண்ணை கள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன.

இந்நிலையில், ரூ.4.20 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் விலை, இப்போது ரூ.4.70 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேவை அதிகரித்திருப்பதே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரூ.66க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி விலையும் ரூ.76ஆக உயர்ந்துள்ளது.