தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலவரம் தொடர்பாக 371 பேர் பிடிபட்டனர்

1 mins read
0aa1079a-c062-4212-bebc-1b8dbad18f05
-

கள்­ளக்­கு­றிச்சி: கள்­ளக்­கு­றிச்­சி­யில் கடந்த ஜூலை மாதம் மூண்ட கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­களைச் சிறப்­புப் புல­னாய்­வுத் துறை காவ­லர்­கள் கைது செய்து வரு­கின்­ற­னர்.

பள்­ளி­யில் உள்ள பொருள்­களைச் சூறை­யா­டி­யது, சேதப்­ப­டுத்­தி­யது, காவ­லர்­க­ளை­யும் காவ­லர்­களின் வாக­னம் மீதும் கல்­வீ­சி­யது ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளின் கீழ் சேலம் மாவட்­டத்­தைச் சேர்ந்த சக்திவேல், பார்த்­தி­பன், ஹரி­ஹ­ரன் ஆகிய மேலும் மூவர் கைது செய்­யப்பட்­டுள்­ள­னர்.

இம்மூவரையும் 15 நாள்­கள் கட­லூர் மத்­திய சிறை­யில் அடைக்க கள்­ளக்­கு­றிச்சி இரண்­டா­வது குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்ற நீதி­பதி முக­ம்மது அலி உத்­த­ர­விட்­டார்.

இவர்­க­ளை­யும் சேர்த்து இது­வரை 371 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், கனி யாமூர் சக்தி மேல்­நி­லைப் பள்­ளி­யில் ஜூலை 17ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீம­தி­யின் மர­ணத்­திற்கு நீதி கேட்டு நடை­பெற்ற போராட்­டம் கல­வ­ர­மாக மாறி­யது.

இந்­தக் கல­வ­ரத்­தில் ஈடு­பட்ட வர்­களை சிசி­டிவி காட்­சி­கள், கலவரத்­தின்போது பதிவு செய்­யப்­பட்ட காணொ­ளிக் காட்­சி­களை ஆதாரமாகக் கொண்­டு சிறப்புப் புலனாய்­வுப் பிரிவு காவலர்கள் கைது செய்து வரு­கின்­ற­னர்.