சென்னை: கேரள மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப் படும் ஓணம் பண்டிகை வரும் 8ஆம் தேதி வருகிறது.
இதையொட்டி, தமிழகத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்களும் இப்பண்டிகையைக் கொண்டாடும் வகையில், ஒன்பது மாவட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறை அளித்துள் ளது.
ஏற்கெனவே சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டு உள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள ரயில்கள் 'ஹவுஸ்புல்'
ஓணம் பண்டிகை கொண்டாடு வதற்காக தமிழகம், வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநில மக்கள், ரயில்களில் சொந்த மாநிலம் செல்லத் தொடங்கியுள்ளனர். அதனால், ரயில்கள் நிரம்பிச் செல்கின்றன.

