திண்டுக்கல்: நத்தம் அருகே அரசுப் பேருந்து ஓர் உணவகத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தேவராஜ், 61. இவர் தனது இருசக்கர வாகனத்தில் உணவகம் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது நத்தத்திலிருந்து மதுரை நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த உண வகத்துக்குள் புகுந்ததில், தேவ ராஜும் அடையாளம் தெரியாத மற்றோர் ஆடவரும் உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். விபத்து குறித்து நத்தம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

