பேருந்து விபத்து: 50 பேர் காயம்

பேருந்து விபத்து: 50 பேர் காயம்

1 mins read
3e863f39-80ab-405e-b343-63e0b567fcdf
-
Google News Preferred Icon

ஈரோடு: ஈரோடு அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடைக்கு பேருந்து சென்று கொண்டிருநத்து.

பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மணியாச்சி பள்ளம் அருகே சென்றபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேங்கடசாமி பேருந்தை வலது புறமாகத் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 20 அடி பள்ளத்துக்குள் குட்டிக்கரணம் அடித்து விழுந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 50 பயணிகள் படுகாயம் அடைந்த னர். அவர்கள் பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.