சென்னை: மருத்துவப் படிப்பை பயில்வதற்கு நீட் நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுவது அவசியம். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் 7ஆம் தேதி இரவு வெளியானது.
இத்தேர்வின் வெற்றி, தோல்வி கள் மாணவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, ேதர்வெழு திய 1 லட்சத்து 46,000 தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "ஜூலை 17ஆம் தேதி 145,988 தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
"அவர்களில் 51.3% மாணவர்கள் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் குறைவுதான். கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
"தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் தன்னம்பிக் கையை வளர்க்கவும் அவர்களது மன உளைச்சலைப் போக்கவும் 110 மனநல ஆலோசகர்கள் ஆலோ சனைகள் கூறி வருகின்றனர்.
"மொத்த மாணவர்களில் 564 பேர் அதிக மன அழுத்தத்துடன் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
"மாவட்ட கல்வி அலுவலர், மனநல ஆலோசகர்கள் அடங்கிய குழுவினர் அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைகள் கூறி வரு கின்றனர்," என்று சொன்னார்.
இதனிடையே, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் நீட் தேர்வில் தோல்வியடைந்த ஸ்வேதா என்ற மாணவி, மன முடைந்த நிலையில், நேற்று தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அடுத்து அவர்கள் என்ன செய்யலாம், என்ன படிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தேர்வில் தேர்ச்சி பெறாத குழந்தைகள் மீது பெற்றோர் கோபத்தைக் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர், ஒரு சில பெற்றோர் தரும் நெருக்கடியால்தான் மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வை எழுதி மன உளைச்சல் அடைகின்றனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

