முன்பைவிட சம்பளம் அதிகம்

முன்பைவிட சம்பளம் அதிகம்

2 mins read
6884cd0b-d173-4e54-9196-f7d825d5585b
-

கூடுதலான புதிய சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் பட்டதாரிகளுக்கு முழுநேர வேலை

'எஸ்­ஐடி' எனும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தி­லி­ருந்து வரும் புதிய பட்­ட­தா­ரி­களில் கூடு­த­லா­னோ­ருக்கு சென்ற ஆண்டு முழு­நேர வேலை கிடைத்­தி­ருக்­கிறது. மேலும், வேலை­யில் சேர்ந்­த­வு­டன் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சம்­ப­ளம் கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய காலத்­தில் இருந்­த­தை­யும்­விட அதி­கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீண்டு வருவ­தற்கு இணங்க இத்­தகைய சூழல் உரு­வெ­டுத்­துள்­ளது.

சென்ற ஆண்டு பட்­டக் கல்வி முடித்த சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­க மாண­வர்­களில் 86 விழுக்­காட்­டி­ன­ருக்கு நிரந்­தர முழு­நேர வேலை கிடைத்­தது. 2020ஆம் ஆண்டுக்கான விகி­தம் 69.8 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சென்ற ஆண்டு சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்தின் புதிய பட்டதாரிகளில் 95.6 விழுக்­காட்­டி­ன­ருக்­குப் பட்­டக் கல்வி முடித்த ஆறு மாதங்­க­ளுக்­குள் வேலை கிடைத்­தது. பகு­தி­நேர வேலை கிடைத்­தோ­ரும் அவர்­களில் அடங்­கு­வர்.

இந்த விகி­தத்­துக்­கும் 2020ஆம் ஆண்டு பதி­வான 95 விழுக்­காட்டுக்­கும் அதிக வித்­தி­யா­சம் இல்லை.

ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் 'ஜாயிண்ட் அட்­டோனமஸ் யுனி­வர்­சிட்­டிஸ் கிரா­ஜு­வேட் எம்­பி­ளாய்­மென்ட்' எனும் கூட்டு தன்­னாட்சி பல்­க­லைக்­க­ழக பட்­ட­தாரி வேலை நிய­மன கருத்­தாய்­வில் இந்தத் தக­வல்­கள் தெரி­ய­வந்­துள்­ளன.

கருத்­தாய்வை சிங்­கப்­பூர் தொழில்­நுட்­ப­க் கழ­கம் கடந்த மார்ச் மாதம் ஒன்­றாம் தேதிக்­கும் மே மாதம் 14ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நடத்தியது.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம், அத­னு­டன் இணைந்து இயங்­கும் 10 வெளி­நாட்டு பல்­கலைக்­க­ழ­கங்­கள் ஆகி­யவை வழங்­கும் 33 பட்­டக் கல்­விப் பாடத் திட்­டங்­களை மேற்­கொண்ட 2,006 பட்­ட­தா­ரி­களில் 84.5 விழுக்­காட்­டி­னர் கருத்­தாய்­வில் பங்­கேற்­ற­னர்.

சென்ற ஆண்டு சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் பட்­ட­தா­ரி­கள் ஒவ்­வொ­ருவரின் சராசரி மாதச் சம்பளம் 3,550 வெள்ளியாகப் பதிவானது. 2020ஆம் ஆண்டு அவர்­கள் சரா­ச­ரி­யா­கப் பெற்ற சம்­ப­ளம் 3,500 வெள்­ளி­யாக இருந்­தது.

இது, கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முன்பு பட்­ட­தா­ரி­கள் பெற்ற சம்­ப­ளத்­தை­­விட அதி­கம் என்று சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம் தெரி­வித்­தது.