அஸர்பைஜானுக்குத் திருப்பி விடப்பட்ட 'எஸ்ஐஏ' விமானம்

அஸர்பைஜானுக்குத் திருப்பி விடப்பட்ட 'எஸ்ஐஏ' விமானம்

1 mins read
2d400a7a-a35a-4b81-a22f-84ebdfc9648e
-

பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­சி­லிருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­கொண்­டி­ருந்த சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் கோளாறு ஏற்­பட்­ட­தால் அஸர்­பை­ஜா­னுக்­குத் திருப்­பி­வி­டப்­பட்­டது. இச்­சம்­ப­வம் நேற்று காலை நிகழ்ந்­தது.

விமா­னத்­தில் கோளாறு ஏற்­பட்­ட­தா­க­வும் அசம்­பா­வி­த­மின்றி அது அஸர்­பை­ஜான் தலை­ந­கர் பாக்­கு­வில் உள்ள விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­ய­தா­க­வும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் பேச்­சா­ளர் ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும்­போது கூறி­னார்.

விமா­னத்­தில் இருந்த 229 பய­ணி­களும் 18 ஊழி­யர்­களும் பிரச்­சி­னை­யின்றி வெளி­யே­றி­னர். பாதிக்­கப்­பட்ட போயிங் 777 ரக விமா­னம் நேற்று முன்­தி­னம் இரவு 11.20 மணிக்கு பாரி­சி­லி­ருந்து கிளம்­பி­ய­தாக ஃபிளைட்­ரே­டார் இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது.