பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அஸர்பைஜானுக்குத் திருப்பிவிடப்பட்டது. இச்சம்பவம் நேற்று காலை நிகழ்ந்தது.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் அசம்பாவிதமின்றி அது அஸர்பைஜான் தலைநகர் பாக்குவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது கூறினார்.
விமானத்தில் இருந்த 229 பயணிகளும் 18 ஊழியர்களும் பிரச்சினையின்றி வெளியேறினர். பாதிக்கப்பட்ட போயிங் 777 ரக விமானம் நேற்று முன்தினம் இரவு 11.20 மணிக்கு பாரிசிலிருந்து கிளம்பியதாக ஃபிளைட்ரேடார் இணையத்தளம் தெரிவித்தது.

