தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைகழுவிய காதலி; மணமேடையில் தாலியைப் பறித்து கட்ட முயன்ற காதலன்

2 mins read
9271b8f7-20c3-4f1d-8adc-c0a491b87fa7
சதீஷ்குமார். படம்: ஊடகம் -

சென்னை: குடும்­பத்­தார் பார்த்த மாப்­பிள்­ளையைத் திரு­ம­ணம் செய்து கொள்­ளப் போவ­தாக திடீ­ரென தெரி­வித்­த­து­டன் முடிந்­தால் அந்­தத் திரு­ம­ணத்தை தடுத்­துப் பார் என்று சவால் விட்ட காத­லிக்கு அதிர்ச்சி அளித்­தார் காத­லர்.

சென்­னை­யைச் சேர்ந்த 25 வய­தான சதீஷ்­கு­மார் நகைக்­க­டை­யில் வேலை பார்த்து வரு­கி­றார். அதே கடை­யில் வேலை பார்த்த 20 வயது இளம்­பெண்­ணுக்­கும் அவ­ருக்­கும் இடையே காதல் மலர்ந்­தது.

கடந்த சில மாதங்­க­ளாக இரு­வ­ரும் காத­லித்து வந்த நிலை­யில், திடீ­ரென காத­லிக்குத் திரு­ம­ணம் நிச்­ச­ய­மான தக­வலை அறிந்து சதீஷ்­கு­மார் அதிர்ச்சி அடைந்­தார்.

இது­கு­றித்து காத­லி­யி­டம் அவர் விசா­ரித்­த­போது, பெற்­றோர் நிச்­ச­யித்த மாப்­பிள்­ளை­யைத்­தான் திரு­மணம் செய்துகொள்­ளப்­போ­வ­தாக காதலி திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­னார்.

இதனால் சதீஷ்குமார் கோபமடைய, "முடிந்தால் எங்கள் திருமணத்தை தடுத்துப்பார்" என்று இளம்பெண் சவால்விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தினம் அந்த இளம்­பெண்­ணுக்கு தண்­டை­யார் பேட்டை பகு­தி­யில் திரு­ம­ணம் நடை­பெற்­றது. அந்த நிகழ்­வுக்கு சதீஷ்­கு­மா­ரும் வந்­தி­ருப்­ப­தைக் கண்டு அவ­ரது காதலி அதிர்ச்சி அடைந்­தார். எனி­னும் பதற்­றத்தை வெளிக்­காட்­டா­மல் மண­மே­டை­யில் மண­ம­க­னு­டன் அமர்ந்­தி­ருந்­தார்.

திரு­ம­ணச் சடங்­கு­கள் நடை­பெற்று, இறு­தி­யில் மணப்­பெண் கழுத்­தில் மண­ம­கன் தாலி கட்ட முயன்­ற­போது, திடீ­ரென மண­மேடைக்கு வந்த சதீஷ்­கு­மார், சினிமா பட பாணி­யில் மண­மகன் கையில் இருந்த தாலியைத் தட்டிப்­ப­றித்­தார்.

பிறகு காத­லி­யின் கழுத்­தில் அதைக் கட்ட முயன்­ற­போது அங்­கி­ருந்­த­வர்­கள் அவ­ரைத் தடுத்து நிறுத்­தி­னர்.

பின்­னர் மண­மக்­க­ளின் குடும்­பத்­தா­ரால் சர­மா­ரி­யா­கத் தாக்­கப்­பட்ட அவர், காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து மண­மக்­க­ளை­யும் காவல் நிலை­யத்­துக்கு அழைத்து வந்த காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­னர். அப்­போது தன் காதலி சவால் விடுத்­த­தால், திரு­மண மண்­ட­பத்­தில் தாம் அத்­து­மீ­றி­ய­தாக சதீஷ்­கு­மார் கூறி­னார்.

அதைக் கேட்ட மண­ம­கன், இளம்­பெண்ணை திரு­ம­ணம் செய்ய மறுத்­தார். மேலும், திரு­ம­ணத்­துக்­காக தாங்­கள் செய்­துள்ள செல­வு­களை மண­ம­கள் குடும்­பத்­தார் ஈடு­கட்ட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

சதீஷ்­கு­மாரை திரு­ம­ணம் செய்துகொள்­ளு­மாறு குடும்­பத்­தார் வற்­பு­றுத்­திய போதி­லும், இளம்­பெண் அதற்கு மறுத்­து­விட்­டார். பிறகு மூவ­ரி­ட­மும் வாக்­கு­மூ­லம் பெற்ற காவல்­து­றை­யி­னர், அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி அனுப்பி வைத்­த­னர்.