சென்னை: தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள் ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், எட்டு ஆண்டு களுக்குப் பிறகு மாநிலத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழக மின்வாரியம் ஏறத்தாழ ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், இந்தக் கட்டண உயர்வு தவிர்க்கமுடியாதது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கு பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இக்கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த உயர்வை உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
"மக்களால் தாங்கமுடியாத அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
"மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், கட்டண உயர்வு தேவை யற்றது. மக்களின் மன நிலையை அரசு உணரவேண்டும்," என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறு கையில், "அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது, கறுப்புக்கொடி ஏந்தி, கறுப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திய ஸ்டாலின், இப்போது முதல்வரான பின் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியா? பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களின் தலையில் கட்டணச் சுமையை ஏற்றுவதுதான் விடியல் ஆட்சியா?" என சாடியுள்ளார்.
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பிரமுகர் ஓ.பன்னீர்செல்வம், "மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்ற, மக்கள் விரோதச் செய லாக உள்ளது. 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற ரீதியில் திமுக அரசு செயல்பட்டுக்கொண்டு உள்ளது," என விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

