'கல்யாண மன்னன்' மீது புகார் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏமாற்றப்பட்டதாக பெண்கள் குற்றச்சாட்டு

'கல்யாண மன்னன்' மீது புகார் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஏமாற்றப்பட்டதாக பெண்கள் குற்றச்சாட்டு

2 mins read
47679731-275f-4e0e-bd27-cb158de437ad
பல பெண்களைத் திருமணம் செய்த பார்த்திபன். பெண்களின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 5

கோவை: திரு­வா­ரூர், கோவை, நாமக்­கல் உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த இளம் பெண்களைப் பார்த்திபன் என்பவர் திருமணம் செய்து அவர்களைக் கைகழுவி விட்டுள்ளார்.

நடி­கர் ஜீவன் நடித்த 'நான் அவ­னில்லை' திரைப்­பட பாணி­யில், பல பெண்­க­ளைத் திரு­ம­ணம் செய்து ஏமாற்றி உள்ள 'கல்­யாண மன்­னன்' பார்த்திபன் மீது, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ­ரன் அலுவல கத்தில் இரு பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

திரு­வா­ரூரைச் சேர்ந்த ரூபா, நாமக்­கல் பகு­தியைச் சேர்ந்த நளினி (பெயர் ­மாற்­றப்­பட்­டுள்­ளது) ஆகிய இருவரும் கோவை ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் அளித்த மனுவில் கூறியுள்ள விவரம்:

கரூர் மாவட்­டம், பரமத்தியை அடுத்த நல்­லி­பா­ளை­யம் பகு­தியைச் சேர்ந்தவர் பார்த்திபன்.

கரு­ணா­நிதி-நிர்­மலா தம்­ப­தி ­ய­ரின் மக­னான இவர், தான் ஒரு தனி­யார் வங்­கி­யில் மேலா­ள­ராகவும் கொங்கு இளை­ஞர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்­பில் நிர்­வா­கி­யாகவும் பணி­யாற்றி வரு­வ­தா­கக் கூறி பல பெண்­களைத் திரு­ம­ணம் செய்து மோச­டி­யில் ஈடு­பட்­டுள்­ள­ார்.

கடந்த 2019ல் 17 வயதே நிரம்­பிய ரூபா என்ற தன்னை திரைப்­படம் எடுப்­ப­தற்­காக நேர்­கா­ணல் செய்து, ­குளிர்­பா­னத்­தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலி­யல் அத்துமீற­லில் ஈடு­பட்­டார்.

மயக்­கம் தெளிந்­த­தும் மன்­னிப்பு கேட்டு திரு­ம­ணம் செய்துகொள்­வ­தாகக் கூறி, கடந்த ஏப்­ரல் மாதம் வரை கோவை புதூர் பகு­தி­யில் பார்த்­தி­பன் தன்­னு­டன் வாழ்ந்து வந்­த­தாகத் தெரி­வித்­துள்­ளார்.

இதே­போல் நாமக்­கல்லைச் சேர்ந்த நளினி என்ற பெண்ணை கடந்த 2020ல் திருமணம் செய்­த­தா­க­வும் சொந்த வீடு, அரசு வேலை­யில் இருப்­ப­தாகக் கூறி பார்த்­தி­பன் தன்னைத் திரு­ம­ணம் செய்­த­தாகக் கூறி­யுள்­ளார்.

சில நாட்­க­ளி­லேயே பார்த்­தி­பன் தங்கி இருந்த வீடு வாடகை வீடு என்று தெரி­ய­வந்­த­தாகவும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

சமூக வலை­த்தளப் பக்­கத்தைப் பார்த்தபோது பல பெண்­க­ளு­டன் பார்த்­தி­பன் தொடர்­பில் இருப்­பது தெரி­ய­வந்­த­தா­க­வும் புகார் மனு­வில் கூறியுள்ளனர்.

பாதிக்­கப்­பட்ட இரு பெண்களும் ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர் காணலில் "பார்த்திபன்மீது காவல்­து­றை­யில் பல­முறை புகார் அளித்­தும் இதுவரை எந்த ஒரு நட­வ­டிக்­கை­யும் எடுக்கப்படவில்லை.

"அவரது அர­சி­யல் செல்­வாக்கு கார­ண­மா­கவே எங்­களுக்கு நியா­யம் கிடைக்­க­வில்லை.

"இனி எங்­களைப் போன்று வேறு எந்தப் பெண்ணும் பாதிக்­கப்­ப­டக் ­கூ­டாது. எங்களை மட்டு மன்றி இன்­னும் பல பெண்­களையும் பார்த்திபன் ஏமாற்றி உள்­ளார்.

"இந்த மோச­டிக்கு பார்த்­தி­பனின் பெற்­றோரும் உடந்தையாக இருந்தனர்," என அழு­து­கொண்டே கூறியுள்ளனர்.