புதுடெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க எதிர்ப்புத் தெரி வித்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக்கொண்டு, ஓபிஎஸ் மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவின் அடிப்படை உறுப் பினராக இல்லாதபோது, தலைமை அலுவலகத்தின் சாவிக்கு ஓபிஎஸ் உரிமை கோருவது எப்படி என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமிவசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இபிஎஸ் தரப் பினர் இதற்கான பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் அல்ல. எனவே, கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையை அவரால் கோரமுடியாது.
அத்துடன், பண விவகாரங் களில் கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலகச் சாவியை ஒப்படைக் கவும் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஒருவர், தலைமை அலுவலக நிர்வாக உரிமையைக் கோரமுடியாது. எனவே, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஓபிஎஸ் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கிவிட்ட பின்னர் அவர் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோர முடியும் எனக் கேட்ட நீதிபதிகள், நீங்கள் ஏன் உரிமையியல் நீதிமன்றத்தை நாடி அலுவலகச் சாவியைப் பெற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களிடம் வினா எழுப்பினர்.

