நீதிபதிகள்: மது விற்கத் தடை விதிக்க நேரிடும்

நீதிபதிகள்: மது விற்கத் தடை விதிக்க நேரிடும்

1 mins read
4859f6d4-ef11-46b6-94d6-fb1f35342f88
-

மதுரை: பள்ளி மாண­வர்­களின் மது அருந்­தும் பிரச்­சி­னைக்­கும் போதைப் புழக்­கம் பக்­கம் சாயும் பிரச்சினைக்கும் உட­ன­டி­யா­கத் தீர்வு காணப்­பட வேண்­டும்.

இல்­லை­யெ­னில் மது விற்­ப­னைக்குத் தடை­வி­திக்க நேரி­டும் என சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை எச்­ச­ரித்­துள்­ளது.

'டாஸ்­மாக்' கடை­யின் மது விற்­பனை நேரத்தை மாற்­றி­ய­மைக்க கோரிய வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்­தது.

இதனை விசா­ரித்த நீதி­ப­தி­கள், "சீருடையுடன் பள்ளி மாண­வர்­கள் மது அருந்­தும் புகைப்­ப­டம் அதிர்ச்சி அளிக்­கிறது. இந்தப் பிரச்சி­னைக் குத் தீர்வு காணப்­படவில்லை எனில் மது விற்­ப­னைக்குத் தடை­வி­திக்க நேரி­டும்," என எச்சரித்து, வழக்கை இரு வாரத்­துக்கு ஒத்­தி­வைத்­த­னர்.