195 நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடி சிறுமி சுபிக் ஷா உலக சாதனை

1 mins read
cc791949-5822-4462-8c4d-58fc4e3f32f2
மாணவி சுபிக்‌ஷா. படம்: ஊடகம் -

திரு­வொற்­றி­யூர்: சென்னை, திரு­ வொற்­றி­யூர் பகு­தி­யைச் சேர்ந்த சுபிக்‌ஷா என்ற சிறுமி, 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை லயம் மாறா­மல் பாடி உலகச் சாதனை படைத்­துள்­ளார்.

அவரை ஆசி­ரி­யர்­கள், மாண வர்கள் உள்­ளிட்ட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

திரு­வொற்­றி­யூர் அண்­ணா­மலை நகர் பகு­தியைச் சேர்ந்­த­வர்­கள் ஹேமந்த்-மோக­னப்­பி­ரியா தம்­ப­தி­யர். இவர்­க­ளின் மூத்த மகள் சுபிக்‌ஷா, 13.

எட்டாம் வகுப்பில் படித்து வரும் சுபிக்‌ஷாவுக்கு, சிறு பிரா­யம் முதலே அனைத்து நாடு­களின் மொழி­க­ளை­யும் கற்­க­வேண்டும் என்ற தணியாத ஆர்­வம் இருந்து வந்­தது.

இதை­ய­டுத்து, பெற்­றோரின் ஒத்­து­ழைப்­பு­டன் 'யூடி­யூப்' மூலம் உலக நாடு­க­ளின் தேசிய கீதங் களைக் கேட்டு, அந்­தந்த நாட்டு ராகம், மொழி­களிலும் உச்­ச­ரிப்பு பிச­கா­மல் பாடி அசத்தி உள்ளார்.

அல்­பே­னியா, ஆப்­கா­னிஸ்­தான் என அகர வரி­சைப்­படி உலக நாடு களைத் தேர்வு செய்து தேசிய கீதங்­களை மனப்பாடம் செய்­துள்ள சுபிக்‌ஷா, இதனை உலகச் சாதனை யாக்கும் முயற்­சி­யில் ஈடு­பட்டார்.

திரு­வொற்­றி­யூர் அரசு நூல­கத்­தில் நேற்று முன்தினம் காலை நடந்த நிகழ்வில், 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை இடை­வி­டாது பாடி­ அசத்தி உலகச் சாதனை புரிந்தார்.