காப்பாற்ற வந்த ஆடவரை இறுக்கிக்கொன்ற மலைப்பாம்பு

காப்பாற்ற வந்த ஆடவரை இறுக்கிக்கொன்ற மலைப்பாம்பு

1 mins read
d24c251f-4b67-4503-be80-3a05d516293a
-
Google News Preferred Icon

காவேரிப்பட்டணம்: கிணற்றுக்குள் விழுந்த மலைப்பாம்பை காப்பாற்றச் சென்ற ஆடவரை, மலைப் பாம்பு இறுக்கி, சுருட்டிக் கொன்றதால் மேல்கொட்டாய் பகுதி மக்கள் சொல்லொணா சோகத்தில் மூழ்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மேல்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்தவர் சின்னசாமி.

விவசாயியான இவரது 50 அடி ஆழக் கிணற்றுக்குள் ஒரு வாரத்துக்கு முன்பு மலைப்பாம்பு விழுந்துவிட்டது.

இப்பாம்பை மீட்பதற்காக நடராஜ் என்பவர் கிணற்றுக் குள் இறங்கியுள்ளார்.

பாம்பை மீட்டு கிணற்றின் பாதி பகுதி வரை தூக்கி வந்தவர், அதன்பிறகு அதன் எடை தாங்காமல் பாம்புடன் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

இந்நிலையில், மலைப் பாம்பு அவரை இறுக்கிப் பிடித்ததால் கூச்சலிடவே சுற்றி நின்றவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புப் படையினர் நீண்ட நேரமாக நடராஜனை மீட்க போராடினர். ஆனால், அவரது உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.