முதலீட்டை ஈர்க்க குழு தென்கொரியா பயணம்

முதலீட்டை ஈர்க்க குழு தென்கொரியா பயணம்

1 mins read
a1d999bd-2d79-4782-a4b7-24c47a3db622
-
Google News Preferred Icon

சென்னை: தொழிற்துறைக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடங்கிய உயர் மட்டக் குழுவினர் ஐந்து நாள் பயணமாக தென் கொரியா செல்ல உள்ளனர்.

"தொழில் துறைக்கான முதலீடு களை ஈர்க்க இத்துறையின் அமைச் சர் தங்கம் தென்னரசு, செயலர் கிருஷ்ணன், தொழில் நிறு வனங் களின் நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் தென்கொரியா செல்கின்றனர்.

"அங்குள்ள தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் உள்ள வளங்கள், ஏற்கெனவே முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய வுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப் படும் சலுகைகள் குறித்து காணொ ளியாகக் காட்டப்பட்டு விளக்கப்பட உள்ளது," என தொழில்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.