பிரபல ரவுடி விவேக் துப்பாக்கி முனையில் கைது

பிரபல ரவுடி விவேக் துப்பாக்கி முனையில் கைது

1 mins read
c64d0124-cf63-436a-943f-b450158d514d
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ரவுடி விவேக்கை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்கள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை தாம்பரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த விவேக் என்ற ஆடவரையும் அவரது கூட்டாளி விக்னேசையும் துப்பாக்கி முனையில் காவலர்கள் கைது செய்தனர்.

தாம்பரத்தை அடுத்த இரும்புலி யூரைச் சேர்ந்தவர் விவேக் ராஜ் என்ற விவேக். இவர் மீது மூன்று கொலைகள், கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக் குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி தாம்பரம் மாந்தோப்பு பகுதி யில் தள்ளுவண்டியில் இட்லி சுட்டு விற்று வரும் முதியவர் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 500 ரூபாயைப் பறித்துச் சென்றுள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து, குற்றவாளியைத் தேடி வந்த காவ லர்கள், மதுரவாயல் அருகே தலை மறைவாக இருந்த விவேக்கையும் அவரது கூட்டாளி விக்னேசையும் துப்பாக்கி முனையில் கைது செய்த னர்.

அப்போது, பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி, காவலர்களிடம் இருந்து தப்பியோட முயன்ற ரவுடி விவேக், அங்கிருந்த ஒரு பாலத்தில் இருந்து தவறி விழுந்தார்.

இதனால், அவரது வலது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், குரோம்பேட்டை மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில், விவேக், தாம் பரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடியைக் கொல்லத் திட்டமிட்டி ருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து 3 பட்டாக் கத்தி களைப் பறிமுதல் செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.