சாபா அல்-அகமது: தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
குவைத்தின் சாபா அல்-அகமது நகரில் ஆடவரின் முதலாளி அவரைச் சுட்டுக்கொன்றார்.
'கிளார்க்' எனும் உதவிப் பணியாளர் வேலையில் சேர்ந்த நான்கே நாள்களுக்குள் திரு ஆர். முத்துக்குமரன் கொல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
வலுக்கட்டாயமாகத் தன்னை இடையராக வேலை செய்ய வைத்ததாகத் திரு முத்துக்குமரன் இறப்பதற்கு முன்பு மனைவியிடம் கூறியிருக்கிறார்.
லட்சுமாங்குடியைச் சேர்ந்த திரு முத்துக்குமரன் குவைத்தில் வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளன்று இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
அதனால் அவருக்கும் அவரின் முதலாளிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த 30 வயது ஆடவரை 24 வயது குடிமகன் ஒருவர் அடித்துத் துன்புறுத்தி சுட்டுக்கொன்றதாக குவைத்தின் 'அய்மன் மாட் நியூஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தெரியவந்தது.
திரு முத்துக்குமரனின் உடலைத் திரும்பப் பெற அவரின் குடும்பத்தார் முயற்சி செய்து வருகின்றனர்.

