840 வீடுகளை மக்களிடம் வழங்கிய முதல்வர்

840 வீடுகளை மக்களிடம் வழங்கிய முதல்வர்

1 mins read
42c7148a-9bee-4029-881c-1f54b31c1f8a
-
Google News Preferred Icon

சென்னை: சென்னை கொளத்தூரில் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளைப் பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன், ஏறக்குறைய ரூ.2 கோடி செலவில் அமைய உள்ள அங்காடி மையக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள், பூங்கா ஆகிய வற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டி னார்.

"வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. அந்தக் கனவை நிறை வேற்றுவதற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம் என்பது மனதுக்கு நிறைவு தருகிறது," என அவர் பேசியபோது கூறினார்.

குடிசைகளை மாற்றி கட்டடம் கட்டுவது மட்டும் அரசின் நோக்கம் அல்ல என்றும் இந்த நகர்ப்புற மக்களின் வாழ்க்கை, வாழ்விடம், வாழ்க்கைத் தரம் அனைத்தும் மேம்பட நினைப்பதாகவும் கூறினார்.