சிலையை வடிவமைத்த சிற்பிக்குப் பாராட்டு

சிலையை வடிவமைத்த சிற்பிக்குப் பாராட்டு

1 mins read
e2299276-c885-4dd2-8c14-91646134fcdb
-
Google News Preferred Icon

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 23 அடி உயர நடராஜர் சிலையின் வழிபாட்டு நிகழ்வில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.

அதன்பின்னர், இந்தியச் சிற் பக் கலைக்கு உதாரணமாக உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடித்துள்ள சிற்பிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் பேசிய தமிழிசை, "தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமுடியாது என்ற வாதம் சரி யல்ல. உலகளவிலான கல்வியை வழங்கவேண்டும் என்பதே இந்தக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம். புதிய கல்விக் கொள் கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். ஆனால், அறவே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சொல்வது சரியல்ல," எனக் குறிப்பிட்டார்.