மதுரை: மதுரை மாநகரின் காவல் துறையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ரமேஷ்பாபு, 56, என்பவர் தான் வசிக்கும் சிந்தாமணி பகுதியில் உள்ள தனது வீட்டில் மறைந்த அவரது தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.
இது குறித்து ரமேஷ் பாபு கூறுகையில், "இன்றைய இளம் தலைமுறையினரிடையே பெற்றோர் மீதும் முன்னோர் மீதும் மதிப்பும் மரியாதையும் படிப்படி யாகக் குறைந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட எங்களது பெரிய குடும்பத்தில் இந்த நிலை வரக்கூடாது என விரும்புகிறேன். எனவே, என் வருங்கால சந்ததியினரிடம் முன்னோர்களின் முக்கியத்துவம் குறித்து உணர்த்துவதற்காக மறைந்த என் தாய் தந்தைக்கு வீட்டிலேயே கோயில் கட்டி வழிபட்டு வருகிறேன்," என்று கூறியுள்ளார்.

