சென்னையில் வேகமாகப் பரவும் மர்மக் காய்ச்சல்

சென்னையில் வேகமாகப் பரவும் மர்மக் காய்ச்சல்

2 mins read
b1adfd32-ed77-4ba1-8f96-d802ac1af638
சளி, காய்ச்சல், இருமல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: கடந்த சில ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு சென்­னை­யில் சளி, இரு­மல், காய்ச்­ச­லால் அவ­திப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­ வ­ரு­கிறது. குறிப்­பாக குழந்­தை­கள், இளம் வய­தி­னர் அதிக பாதிப்­புக்கு உள்­ளாகி வரு­கின்­ற­னர்.

சென்னை எழும்­பூர் குழந்­தை­கள்­நல மருத்­து­வ­ம­னை­யில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் காய்ச்­சல் கார­ண­மாக அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இந்த மருத்­து­வ­ம­னை­யின் காய்ச்­சல் பிரி­வில் 300 படுக்­கை­கள் உள்­ளன.

சளிக்­காய்ச்­சல் கார­ண­மாக அதிக அள­வில் குழந்­தை­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தா­க­வும் இத­னால், படுக்­கை­கள் வேக­மாக நிரம்பி­ வ­ரு­வ­தா­க­வும் மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

சென்­னை­யிலுள்ள பெரும்­பா­லான அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் குழந்­தை­க­ளுக் கான உள்­நோ­யா­ளி­கள் பிரிவு நிரம்பி வழி­கிறது. இதே­போல வெளி­நோ­யா­ளி­கள் பிரி­வி­லும் வழக்­கத்­தை­விட 25 விழுக்­காட்­டி­னர் கூடு­த­லாக காய்ச்­ச­லுக்கு சிகிச்சை பெற்று செல்­கி­றார்­கள்.

சளி, இரு­மல், காய்ச்­சல் ஆகி­யன குழந்­தை­க­ளுக்­குப் பர­வு­கின்­றன. காய்ச்­சல் மூன்று அல்­லது நான்கு நாள்களில் குறைந்­தா­லும், இரு­மல் குறைந்­தது இரு வாரங்­க­ளுக்கு நீடிக்­கிறது. எந்த வகைக் கிருமியால் இவர்கள் பாதிக்கப்படு கின்றனர் என்பது மர்மமாக உள்ளது.

மருந்து கொடுத்­தா­லும் இரு­மல் எளி­தில் அடங்­க­வில்லை என மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர். சளி, இரு­மல், காய்ச்­சல் வேக­மா­கப் பர­வு­வ­தற்கு வானிலை மாற்­ற­மும் ஒரு கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

கொரோனா பர­வல் கார­ண­மாக கடந்த ஈராண்­டு­களில் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும்; சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்; வெளியே நட­மா­டா­மல் வீடு­க­ளி­லேயே இருக்க வேண்­டும் என்ற நடை­மு­றை­கள் விதிக்­கப்­பட்டு இருந்­த­தால் அந்­தக் காலகட்­டங்­களில் காய்ச்­சல் பர­வ­லுக்­கான வாய்ப்பு கணி­ச­மாக குறைந்து இருந்­தது.

தற்­போது கொரோனா பர­வல் குறைந்­த­தை­ய­டுத்து அரசு பல்­வேறு தளர்­வு­களை அளித்­துள்­ளது. இத­னால் கிரு­மி­கள் வேக­மாகப் பர­வும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றன.

பல்­வேறு கிரு­மி­கள் தற்­போது பர­வி­வ­ரு­வ­தா­க­வும் இத­னால் கடு­மை­யான காய்ச்­சல், நடுக்­கம், கடும் களைப்பு, தலை­வலி, உடல்­வலி, தொண்­டை­வறட்சி ஆகி­யன ஏற்­

ப­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்