ராகுல் நடைப்பயண நிதி முறைகேடு என கட்சிக்குள் சலசலப்பு

ராகுல் நடைப்பயண நிதி முறைகேடு என கட்சிக்குள் சலசலப்பு

2 mins read
57a1a1be-c65f-4418-88d9-31e9672525c5
ஜோதிமணி எம்.பி. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி இந்­திய ஒற்­று­மைப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

கன்­னி­யா­கு­ம­ரி­யில் தொடங்­கிய அவர் நான்கு நாள்கள் நடைப்­ப­ய­ணம் செய்து தற்­போது ேகர­ளா­வில் உள்­ளார்.

தமி­ழ­கத்­தில் அவ­ரது நடைப்­ப­ய­ணத்தை பிரம்­மாண்­ட­மாக நடத்­தும் வகை­யில் காங்­கி­ரஸ் எம்பி, எம்­எல்­ஏக்­கள் மற்­றும் உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளி­டம் நிதி வசூல் செய்­யப்­பட்­டது. இதை கட்­சி­யின் முக்­கிய நிர்­வா­கி­கள் முன்­னின்று வசூல் வேட்டை செய்­து­வந்­த­னர்.

கட்­சி­யில் உள்ள தொழி­ல­தி­பர்­கள், வர்த்­தக முத­லா­ளி­கள் என பல­ரி­ட­மும் பெரு­ம­ள­வில் நிதியை வாங்­கிக் குவித்­த­னர். அப்­படியிருந்­தும் செல­வு அதி­க­மா­ன­தாக கட்­சி­யின் மூத்த நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இவ்­வ­ளவு நிதி வசூ­லித்­தும் மீத­மில்­லா­மல் போனது கட்­சி­யி­னர் மத்­தி­யில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது. இதற்­குக் கார­ணம், வசூல் செய்த நிதி­யில் முறை­கேடு நடந்­த­து­தான் என்று கட்சி நிர்­வா­கி­கள் தரப்பு புகார் எழுப்­பி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோதி­மணி, கட்­சி­யின் மூத்த துணைத் தலை­வர் ஒரு­வர் கட்சி நிதி­யில் முறை­கேடு செய்­த­தாக சக நிர்­வாகி ஒரு­வ­ரி­டம் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார்.

இந்த தக­வல் சம்­பந்­தப்­பட்­

ட­வ­ருக்கு சென்­ற­தால் அவர் சமூக வலைத்­த­ளத்­தில் ஜோதி­ம­ணிக்கு நேர­டி­யாக சவால் விட்டு பதிவு போட்­டுள்­ளார்.

இந்த மோதல் விவ­கா­ரம் காங்­கி­ர­சார் மத்­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இந்த வலை­த் தளப் பதிவுக்கு காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரும் மற்­ற­வர்­களும் தங்­கள் கருத்­து­களைப் பதிவு செய்து வரு­வ­தால் மோதல் பிரச்சினை சூடு­பி­டித்­துள்­ளது.

இது, காங்­கி­ர­சார் மத்­தி­யில் அனலைக் கிளப்­பி­யுள்­ள­தால் டெல்லி தலைமை வரை இந்த விவ­கா­ரம் சென்­றுள்­ளது.

எனவே, ராகுல் நடை­ப்ப­ய­ணத்­துக்­காக பெறப்­பட்ட நிதி தொடர்­பாக தமி­ழக காங்­கி­ரஸ் தலை­மை­யி­டம் வரவு-செலவு கணக்கை கேட்க டெல்லி தலைமை திட்­ட­மிட்­டுள்­ள­தாக காங்­கி­ரஸ் வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்­பாக பேசப்­ப­டு­கிறது.