செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9b9d43b7-8050-4b8b-882b-be6a431b3c30
-

விமானம் கோளாறு; பயணிகள் தகராறு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் விமானம் புறப்படாததால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஷார்ஜாவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 10.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் பகல் 12.50 மணிக்கு குவைத் செல்ல இருந்த அந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படாததால் நீண்டநேரம் காத்திருந்து பொறுமை இழந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர்

15 மணி நேர தாமதமாக, பின்னிரவு 2 மணியளவில் விமானம் குவைத் புறப்பட்டுச் சென்றது.

பல்லவர் காலக் கொற்றவை சிற்பம்

ஆரணி: திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி-சேத்துப்பட்டு செல்லும் சாலையில் விளைசித் தேரி, துந்தரீகம்பட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்

களில் மிகப் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்லவர் கால சிலைகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்புவராயர் ஆய்வு மையப் பேராசிரியர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆரணி ஆர்.விஜயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ளது கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் என்பது ஆய்வில் உறுதியானது. மேலும், இக்கோயிலுக்கு அருகிலேயே கடவுள் சிலையொன்றையும் கண்டெடுத்தனர்.

வெடிகுண்டு: வெளிநாட்டு மிரட்டல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவரும் நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பள்ளியில் வெடிகுண்டு இருப்ப தாக காவல்துறையினருக்கு மிரட்டல் சென்றது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தொலைபேசி வழியாக அதேபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிகாலை முதலே வெடி குண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டு எதுவுமில்லை. மிரட்டல் வந்த வாட்ஸ்அப் எண் வெளிநாட்டிலிருந்து வந்தது போல் இருப்பதால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் குழந்தை, பெண் பலி

வாத்தலை: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று கோயில் தரிசனம் செய்துவிட்டு மினி வேன் ஒன்றில் சொந்த ஊர் திரும்பினர். முக்கொம்பு, வாத்தலை என்ற இடத்தில் சாலையோரம் வேனை நிறுத்தி இருந்த போது சேலத்திலிருந்து வந்த சிமெண்ட் லாரி ஒன்று ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது சரிந்து விழுந்தது. இதில் வேன் நொறுங்கியது. வேனில் இருந்த ராசாத்தி, 43, என்பவரும் ரக்க்ஷனா என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலி மருத்துவர்கள் கைது

சிவகங்கை: தேவகோட்டையில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது போலியான சித்த மருத்துவச் சான்றிதழை வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த தாரகராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அமராவதிபுதூரில் மருத்துவமனை நடத்தி வந்த கைராசி மருத்துவர் என்றழைக்கப்படும் முருகானந்தமும் போலி மருத்துவர் என தெரியவந்ததை யடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.