சென்னை: மாணவ, மாணவியரை நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாற்றிக் காட்டும் வகையில் சிற்பி என்னும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "சிறுவர்களை இளமைக்காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்க 'சிற்பி' திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
"சிறார் குற்றங்களைக் கட்டுப்
படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
"சிறார் குற்றச் செயல்களில் ஈடுபட, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் காரணமாக அமைகின்றன.
"'சிற்பி' செயல் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும் 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
"ஒவ்வொரு பள்ளியிலும் இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்றார் ஸ்டாலின்.

