பழைய விமானங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

பழைய விமானங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

1 mins read
f915e070-03f9-49df-b784-dd5c03d745c2
-

ஆலந்­தூர்: சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு, என்­இ­பிசி, கிங்­ஃபி­ஷர், ஜெட் ஏா்வேஸ், டெக்­கான் ஏா்லைன்ஸ், பேர­ம­வுண்ட் ஆகிய விமான நிறு­வ­னங்­களைச் சோ்ந்த விமா­னங்­கள் இயக்­கப்­பட்டு வந்­தன. ஆனால் தற்­போது அந்த விமான நிறு­வ­னங்­கள் செயல்­பாட்­டில் இல்லை. அவற்­றின் விமா­னங்­கள் எது­வும் விமா­ன­நி­லை­யத்­தில் இல்லை. இருப்­பி­னும் செயல்­பாட்­டில் இல்­லாத என்­இ­பிசி, கிங்­ஃபி­ஷர், ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறு­வ­னங்­க­ளின் பயன்­ப­டுத்­தப்­

ப­டாத 12 விமா­னங்­கள், சென்னை விமான நிலை­யத்­தின் வட­மேற்­குப் பகு­தி­யில் பல ஆண்­டு­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றில் ஆறு விமா­னங்­களை அகற்­றும் பணி­கள் நடை­பெற்­றன. எஞ்­சிய விமா­னங்­க­ளை­யும் அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­கள் தொடங்கி உள்­ளன.