சசிகலா: ஜெயலலிதாவைப்போல் மக்கள் என்னை நம்புகிறார்கள்

நாமக்கல்: கொங்கு மண்­ட­லத்­தில் அர­சி­யல் சுற்­றுப்­ப­ய­ணம் செய்­து­

வ­ரும் வி.கே.சசி­கலா சேலம் மாவட்­டத்­தைத் தொடர்ந்து நாமக்­கல் மாவட்­டம் பள்­ளிப்­பா­ளை­யத்­திற்­குச் சென்­றார்.

அங்கு அவ­ருக்கு ஆயி­ரக்­

க­ணக்­கான தொண்­டர்­கள் உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர். பிர­சார வேனில் அமர்ந்­த­படி பேசிய சசி­கலா "அதி­முக ஆட்­சி­யில் ஜெய­ல­லிதா கொண்டு வந்த திட்­டங்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போட்­ட­து­தான் திமுக அர­சின் சாதனை. அதி­மு­கவை மீட்­ப­து­தான் எனது முழுப் பணி.

"வர­லாறு உள்ள வரை எம்­ஜி­ஆர், ஜெய­ல­லிதா ஆகிய மாபெ­ரும் தலை­வர்­களை யாரும் மறக்க முடி­யாது," என்று தொண்­டர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்.

அத­னைத் தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த சசி­கலா, "2024ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் எனது தலை­மை­யில் அதி­முக நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும்.

"கழ­கத் தொண்­டர்­கள் ஒத்­து­ழைப்­பு­டன் நிச்­ச­ய­மாக அதி­மு­கவை மீட்­பேன். அதி­மு­க­வில் உள்ள ஒவ்­வொரு தொண்­ட­ரும் எனக்கு முக்­கி­யம்.

"'ஜெயலலிதாவைப்போல் இவரை நம்பினால் கண்டிப்பாக செய்வார்' என்ற என்மீதான நம்பிக்கை எல்லா ஊர் மக்களிடமும் தெரிகிறது.

"தேர்­தல் அறிக்­கை­யில் வாக்கு றுதி அளித்த எதை­யும் திமுக நிறை­வேற்­ற­வில்லை. மின் கட்­டண உயர்வு ஏழை, எளிய மக்­களை பாதிக்­கக்­கூ­டி­யது. 63 விழுக்­காட்­டி­னர் 200 யூனிட் மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்தக்கூடி­ய­வர்­க­ளாக உள்­ள­தால் பொது­மக்­கள் பெரும் அள­வில் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். மின் கட்­டண உயர்­வால் சிறு­குறு தொழில்­களை மூடும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது," என்­றார் சசி­கலா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!