'ஃப்ளு' காய்ச்சல் காரணமாக 282 குழந்தைகள் பாதிப்பு

'ஃப்ளு' காய்ச்சல் காரணமாக 282 குழந்தைகள் பாதிப்பு

1 mins read
1ee3bc48-0965-44ad-ab5d-e44cf09c0d4d
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 'இன்­ஃப்ளுயன்ஸா' என்ற 'ஃப்ளு' காய்ச்­சல் காரணமாக 282 குழந்­தை­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்கப்­பட்டு, சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பிரமணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து, மக்­கள் அச்­சம் அடை­யத் தேவை­யில்லை என்­றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் அமைச்சர் நேற்று பேசி­ய­போது, "மாநி­லம் முழு­வ­தும் 'ஃப்ளு' காய்ச்­ச­லால் 282 சிறார்கள் மட்­டுமே பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில் 13 குழந்­தை­கள் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 215 குழந்­தை­கள் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களி­லும் 54 குழந்­தை­கள் வீடு­களி­லும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"காய்ச்­சல், சளி, இரு­மல், தொண்­டை­வலி ஆகி­யவை 'இன்­ஃப்ளுயன்ஸா' காய்ச்­ச­லின் அறி­கு­றி­கள். இந்த அறி­குறி உள்ள குழந்­தை­க­ளி­டம் இருந்து மற்ற குழந்­தை­கள் விலகி இருக்­க­வேண்­டும்," எனக் கூறிய அமைச்­சர், தமி­ழ­கத்­தில் 243 பேர் டெங்கிக் காய்ச்­சலால் பாதிக்கப்பட்டு இருப்­ப­த­ாகவும் தேவை­யான மருந்து கையி­ருப்­பில் இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.