பாடிக்கொண்டே தேயிலை பறிக்கும் பெண் குயில்

பாடிக்கொண்டே தேயிலை பறிக்கும் பெண் குயில்

1 mins read
5bb96650-3bdc-4af9-b068-0dbb4947d1d7
பாடிக்கொண்டே தேயிலை பறிக்கும் ரெஜினா. படம்: ஊடகம் -

நீலகிரி: சுற்­று­லா­வுக்­கும் தேயி­லைக்­கும் பெயர் போன நீல­கிரி மாவட்­டத்­தின் கோத்­த­கி­ரி­யில் பலரை­யும் ஒரு குயி­லாக கவர்ந்து வரு­கி­றார் ரெஜினா என்ற பெண்.

அவ­ரது கீதம் தேயிலை தோட்ட ஊழி­யர்­க­ளின் களைப்பை யும் கவ­லை­யை­யும் மறக்­கச் செய் யும் அரு­ம­ருந்­தாக மாறி­யுள்­ளது.

'சின்ன சின்ன வண்­ணக் குயில்', 'நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா', 'ஜில் ஜில் மன­தில்', 'பிள்ளை நிலா' என தொடர்ந்து அவர் பாடிக்­கொண்டே வேலை செய்­கி­றார்.

கோத்­த­கிரி தேயி­லைத் தோட்­டத்­தின் வாசத்­தின் ஊடே காது­களில் தேனாய் பாய்­கிறது அவரது கானம்.

இந்த கானத்­துக்­குச் சொந்­தக் காரர் சுசீ­லாவா, ஜான­கியா, சித்­ராவா எனத் தேடு­ப­வர்­க­ளுக்கு காட்­சி­யாக நிற்­கி­றார் ரெஜினா.

"ஆடிப்­பாடி வேலை செய்­தால் அலுப்­பி­ருக்­காது," என்று கூறு­வதற்­கேற்ப, சக தொழிலாளர்களின் இத­யத்தை வருடி வந்த ரெஜி­னா­வின் குரல், இப்­போது சமூக வலைத்தளங்களை­யும் வருடி வரு­கிறது.

"எனக்கு யாரும் சொல்­லித் தர­வில்லை. நானும் யாரிடமும் கற்­றுக்கொள்­ள­வும் இல்லை.

"எங்­கா­வது பாடல் கேட்கும். அதைக் கேட்டுப் பாடு­வேன். பாத்­தி­ரம் துலக்­கும்­போது, சமைக்­கும்­போது, துணி துவைக்­கும்­போது, வாசல் கூட்­டும்போது எல்­லாம் பாடிக்­கொண்டேதான் வேலை செய்­வேன்," என்­கி­றார் ரெஜினா.

"ரெஜி­னாவின் திறமை எப்­படி­யா­வது இந்த உல­கத்­துக்கு தெரி­ய­வந்து நல்ல பெயர் அவ­ருக்கு கிடைக்­க­வேண்­டும். திரைப்­ப­டத்­தில் பாட அவ­ருக்கு வாய்ப்பு கிடைக்­க­வேண்­டும்," என மற்ற தேயி­லைத் தோட்ட ஊழி­யர்­கள் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர்.