நாகர்கோவில்: பட்டதாரி இளையர் இருவர் வரதட்சணையை எதிர்த்து பொதுமக்கள் மத்தியில் நூதனமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
"வரதட்சணை எதுவும் நாங்கள் வாங்கமாட்டோம்; கார், தங்கம், பணம் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை," என்ற அவர்களது அறிவிப்பை வாசித்த பொதுமக்களில் சிலர் பாராட்டிச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெனிஷ், 25, சுமிஷ், 25. நண்பர் களான இருவரும் பட்டு வேட்டி, சட்டையுடன் மணமகன்கள் கோலத்தில் கையில் 'மணப்பெண் தேவை' என்ற விளம்பரப் பதாகையுடன் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் பிடித்திருந்த பதாகை யில் வரதட்சணையாக கார், தங்கம், பணம் தேவையில்லை என்றும் சாதி, மதம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அத்துடன், பேருந்து நிலையம் வந்த இளையர்கள், கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை கேட்கா தீர்கள், பணத்தைவிட குணத்தைப் பார்த்து பெண்ணைத் தேர்ந்தெடுங்கள் எனவும் அறிவுறுத்தினர்.
"சாதாரணமாக வரதட்சணை வாங்காதீர்கள் என முழக்கமிட்டு பிரசாரம் செய்தால் பொதுமக்கள் கேலி செய்வதுண்டு. ஆனால், மணமகன் கோலத்தில் எங்களது இந்த விழிப்புணர்வு முயற்சி சமூ கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது," என ஜெனிஷ், சுமிஷ் கூறியுள்ளனர்.

