முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து

முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து

1 mins read
9eca3e10-cdf9-4351-9cae-f6bb22674972
-

பண்ருட்டி, முத்தாண்டிக் குப்பம், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரமாகப் போராடி முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் மூண்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

படம்: ஊடகம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற் சாலையில் திடீரென மூண்ட தீயில் 1,500 மூட்டை முந்திரிப் பருப்புத் தோல்களும் 500 லிட்டருக்கும் மேலான முந்திரி எண்ணெய்யும் கருகி நாசமாகின.

மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர், இந்த முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில், தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தீயணைப்புத்துறையினர் ஐந்து மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அப்பகுதி புகைமூட்டமாக இருந்தது.

25 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரிப் பருப்பு தோல், இயந்திரங் கள் எரிந்து நாசமானதாக காவ லர்கள் தரப்பில் கூறப்படுகிறது.