திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தைக்கு மது புகட்டிய போதைப் பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்ட காவலர்கள், அதனை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர்.
குழந்தையைப் பெண்ணிடம் இருந்து காவலர்கள் மீட்டபோது, அவர் மடியில் மறைத்து வைத்திருந்த மதுபோத்தல்கள் கீழே விழுந்தன. குழந்தை தன்னுடையது தான் என்று கூறிய அப்பெண் மதுபோதையில் சாலையில் படுத்துப் புரண்டார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த பெண் காவலர்கள், பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்டனர். பெண் காவலர்கள் குழந்தையை பார்த்தபோது அது மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

