நீலகிரி: செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 75 செயற்கைக் கோள் களை ஏவும் மாபெரும் திட்டத்தின் கீழ், தமிழகம் சார்பாக ஒரு ஏவுகணையைத் தயாரித்து ஏவு வதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த இரு பழங்குடி இன மாணவர்களும் ஏவு கணையை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு தேர்வாகி உள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் அரசுப் பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வரும் ராஜன், ரேவதி என்ற இரு மாணவர்களும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
விரைவில் இம்மாணவர்கள், இஸ்ரோ ஆய்வு மையத்தில் நேரில் பயிற்சி பெற உள்ளதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளித் தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் கூறுகையில், "அகஸ்தியர்' என்ற பெயரில் ஏவு கணை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
"எங்களது அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் 131 மாணவர்களில் இருவருக்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைத் துள்ளது.
"கைபேசித் தொடர்பு சரிவர கிடைக்காத சூழலில், இஸ்ரோ எட்டுப் பிரிவாக நடத்தும் பாடங் களை நானும் படித்து, இவ்விரு மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து படிக்கவைத்தேன். மாணவர்களும் ஆர்வத்துடன் படித்து இஸ்ரோ ஆய்வு மையத்தில் நேரில் பயிற்சி பெறுவதற்குத் தேர்வாகி உள்ளனர்," என்று கூறியுள்ளார்.
இஸ்ரோ என்றால் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது. எங்கள் தலைமை ஆசிரியர்தான் இதுகுறித்து எங்களுக்குப் புரியவைத்து, ஏவுகணை அனுப்பும் குழுவில் எங்களை இடம்பெறச் செய்தார். முன்னாள் அதிபர் அப்துல் கலாம் கூறியதைப் போல எங்கள் கனவு நனவாகி உள்ளது.
அரசுப் பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளி மாணவர் ராஜன்

