சென்னை: தமிழகத்தில் அதிக அளவிலான குழந்தைகள் எச்.1 என்.1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தொடக்கப்பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என மருத்துவர்கள், பொதுமக்கள், அர சியல் வட்டாரத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், காய்ச்சல் பாதிப்பு அளவுக்கு அதிகமாக இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இப்போதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் 1,044 பேர் 'இன்ஃப்ளுயன்சா' என்ற எச்.1 என்.1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ள தாகக் கூறிய அவர், இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடு முறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியுள்ள அவர், எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு 282 ஆக இருந்த நிலையில், இப்போது 1,044 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சொன்னார்.
இதனிடையே, குழந்தைகளைக் காக்கவும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் நிலைமை சீரடை யும் வரை ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடு முறை அறிவிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், முன் னாள் முதல்வர் ஓபிஎஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

