கோவை: கஞ்சா குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனை சரியானதே, அதில் குறுக்கிடத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் 2018ல் காரில் 216 கிலோ கஞ்சா கடத்திய நான்கு பேரை ஆர்எஸ் புரம் காவலர்கள் கைது செய்தனர்.
கோவை சிறப்பு நீதிமன்றம், இருளாண்டி, தர்மர், பந்தீஸ்வரன், சதீஸ்குமார் ஆகியோருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இத்தண்டனையை எதிர்த்து நால்வரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், மனுக்களை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, "கைப்பற்றப்பட்டது தடை செய்யப்பட்ட கஞ்சா என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவை நீதிமன்றம் குறைந்தபட்ச தண்டனையே விதித்துள்ளது. இதில் குறுக்கிடத் தேவை யில்லை," என தீர்ப்பளித்தார்.

