ஓபிஎஸ்: தமிழக அரசு சோதனை நடத்துவதில் தவறில்லை

ஓபிஎஸ்: தமிழக அரசு சோதனை நடத்துவதில் தவறில்லை

1 mins read
59f750d3-898f-45c0-9df4-e67c20caa573
-

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர்­கள் வீடு­களில் லஞ்ச ஒழிப்பு அதி­கா­ரி­கள் தொடர்ந்து சோதனை நடத்திவரும் நிலை­யில், "திமுக அரசு தன் கட­மை­யைச் செய்­கிறது. இதில் எந்தத் தவ­றும் இல்லை," என்று முன்­னாள் முதல்­வர் பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், "தாங்­கள் நிர­ப­ராதி என நிரூ­பிக்­கவேண்­டி­யது குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளின் பொறுப்பு," என்­றார்.

"நான், ஜெய­ல­லிதா அம்­மா வோடு 21 ஆண்­டு­கள் உட­னி­ருந்து பணி­யாற்­றி­ய­வன். அவர்­களின் வாக்­கு­தான் வேத­வாக்கு. ஏழை-எளிய மக்­க­ளுக்­காக, தொண்­டர்­க­ளுக்­காக உரு­வாக் கப்­பட்ட இயக்­கம்­தான் அதி­முக. அத­னைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கத் தான் நாங்­கள் போரா­டிக்­கொண் டிருக்­கி­றோம்," என்று கூறி­னார்.

"திமுக அரசு உங்­கள் மீது மட்­டும் ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?" என்ற கேள்­விக்கு, ஓபி­எஸ் பதி­லளிக்கவில்லை.