வேலூர்: வேலூர் அருகே கணவனால் கைவிடப்பட்டு, பிச்சைஎடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு, சாலையோரம் தங்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், பிரசவ வலி ஏற்பட்டு கதறி உள்ளார்.
இதையறிந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணை சேயுடன் வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
வேலூரில் உள்ள தெற்கு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் இள வரசி கூறுகையில், "ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவர் சபானா, 30. இவருக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக தாய்மை அடைந்த சபானாவை அவரது கணவர் கைவிட்டு, வேறு பெண்ணுடன் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
"தனது குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாமல் தவித்து வந்த சபானா வேலூரில் பிச்சை எடுத்து வந்துள்ளாா். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனா். சிகிச்சைக்குப் பிறகு சபானாவை பாதுகாப்பு இல்லத்தில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

