விழாக்களில் பங்கேற்கச் சென்ற உறவினர்கள் எட்டுப் பேர் பலி

சேலம்: சேலம் மாவட்­டம், வாழப்­பாடி அருகே நின்­று­கொண்­டி­ருந்த சொகு­சுப் பேருந்து மீது மணல் லாரி மோதி­ய­தில், மஞ்­சள் நீராட்டு விழா­வுக்­கா­கச் சென்­று ­கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐவர் உட்­பட ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர்.

படு­கா­யமடைந்த இரு பயணிகள் வாழப்­பாடி அரசு மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் சேலத்­தில் இருந்து சென்னை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த ஒரு சொகு­சுப் பேருந்து, பெத்­த­நா­யக்­கன்­பா­ளை­யத்­தில் நின்று பய­ணி­களை ஏற்­றிக்­கொண்­டி­ருந்­தது.

சென்­னை­யில் நடை­பெ­றும் உற­வி­னர் இல்ல மஞ்­சள் நீராட்டு விழா­வில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கச் சென்ற ஏழு பேர் கொண்ட ஒரு குடும்­பத்­தி­னர், பேருந்­தின் வலது பக்­க­மாக நின்றுகொண்டு உடை­மை­க­ள், சீர்­வ­ரிசைப் பொருள்­க­ளை­ ஏற்­றிக்­கொண்டு இருந்­த­னர்.

அப்­போது, மணல் ஏற்­றிக் கொண்டு வேக­மாக வந்த லாரி கட்­டுப்­பாட்டை இழந்து கண்ணிமைக் ­­கும் நேரத்­தில் பயங்­க­ர­மாக மோதி­விட்டு, உர­சி­ய­படி சென்­றது.

இத­னைத்தொடர்ந்து, பேருந்து சற்று தூரம் வரை இழுத்­துச்­செல்­லப்­பட்­டது.

இந்த விபத்­தில், சீர் வரிசை பொருள்களை ஏற்றிய ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஐவ­ரும் பேருந்தின் உதவியாளரும் உயி­ரி­ழந்­த­னர்.

தப்­பி­யோ­டிய லாரி ஓட்­டு­நரை காவ­லர்­கள் தேடி­வ­ரு­கின்­ற­னர்.

இந்நிலையில், நேற்று காலை விபத்து நடந்த இடத்­தில் சேலம் மாவட்ட ஆட்­சி­யர் கார்­மே­கம், காவல் அதி­காரி ஸ்ரீ அபி­நவ் ஆகி­யோர் ஆய்வு செய்­த­னர்.

விபத்து நடந்த இடத்­தைச் சீர­மைக்­கும் பணி­யில் காவ­லர்­களும் சுங்­கச்­சா­வடி ஊழி­யர்­களும் ஈடு பட்­ட­னர்.

"பேருந்தைச் சாலை­யோ­ர­மாக நிறுத்தி பய­ணி­களை ஏற்­றா­மல் நடு சாலை­யில் நிறுத்தி பய­ணி­களை ஏற்­றி­யதே விபத்­துக்குக் கார­ணம்," என அப்­ப­குதி மக்­கள் குற்­றம்­சாட்டி­யுள்ள நிலை­யில், அது­கு­றித்­தும் ஏத்­தாப்­பூர் காவ­லர்­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

மற்­றொரு விபத்­தில் தம்­பதி பலி

இத­னி­டையே, சேலத்­தில் நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில் வீர­ப­யங்­க­ரத்­தில் உள்ள குல­தெய்­வம் கோவில் விழா­வில் பங்­கேற்­கச் சென்­று­கொண்­டி­ருந்த ஒரு தம்­ப­தி­யர் விபத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­த­னர்.

கள்­ளக்­கு­றிச்சி அருகே இரண்டு இரு­சக்­கர வாக­னங்­கள் மீது வேன் மோதி­ய­தில் சேலம் மாவட்­டம், எ.வாழப்­பா­டி­யைச் சேர்ந்த கண­வன், மனைவி உயிரிழந்தனர். வேன் ஓட்­டு­ந­ரும் படு­கா­ய­ம­டைந்த மற்ற நால்­வ­ரும் மேல்­சி­கிச்­சைக்­காக கள்­ளக்­கு­றிச்சி அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!