முருகன்: கடல்வளம், கடற்கரையைப் பாதுகாக்க விழிப்புணர்வு

முருகன்: கடல்வளம், கடற்கரையைப் பாதுகாக்க விழிப்புணர்வு

1 mins read
fbd3bba1-6be4-4b12-a6f9-50099c63b027
சென்னை பெசண்ட் நகர் எலி­யட்ஸ் கடற்­கரை­யைத் தூய்­மைப் படுத்தும் பணி­களை மத்­திய இணை அமைச்சர் எல் முரு­கன் தொ­டங்கி வைத்­தார். மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் குப்பைகளைச் சேகரிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: இந்­தியா முழு­வ­தும் 75 இடங்­களில் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி மேற் கொள்ளப்பட்டது.

அனைத்­து­லக கடற்­கரை தூய்மை விழிப்­பு­ணர்­வு தினத்தை ஒட்டி சென்­னை­யில் நடை­பெற்ற மாரத்­தான் நிகழ்ச்­சி­யில் மத்­திய இணை அமைச்­சர் எல் முரு­கன் பங்­கேற்­றார்.

இதேபோல், யூனியன் பிரதேச மான புதுச்­சே­ரி­யில் துணை நிலை ஆளு­நர் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் இந்நிகழ்வைத் தொடங்­கி­வைத்­தார்.

சென்­னை­யில் நேற்­று­முன்­தி­னம் மாரத்­தான் ஓட்­டத்துடன் கடற்கரை யைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வு நடை­பெற்­றது.

இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு மத்­திய இணை அமைச்­சர் எல் முரு­கன் பேசியபோது, "இயற்கை வளங்­க­ளான கடல்­வளத்­தைப் பாது­காப்­ப­தில் நாட்டில் உள்ள ஒவ்­வொ­ரு­­வருக்­கும் கட­மை­யும் பொறுப்­பும் உள்ளது. அதை உணர்த்­தும்­வி­த­மாக கடற்­கரை­யைத் தூய்­மைப்­ப­டு­த்­தும் பணி நாட்டில் உள்ள 75 இடங்­களில் நடத்தப்படுகிறது," என்று கூறி­னார்.

கடல்வளம், கடற்­க­ரை­யைப் பாது­காப்பது குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக சென்னையில் நடத்தப்பட்ட மாரத்­தான் ஓட்­டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "கடற்­க­ரை­களில் குப்­பை­க­ளைக் கொட்­டக்கூடாது. குறிப்­பாக ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தக்­கூடிய நெகிழிப் பொருள்­களை முற்­றி­லும் தவிர்த்து­விட வேண்­டும் என்­ப­தில் அனை­வ­ரும் உறு­தி­யாக இரு­க்கவேண்­டும்," என்றும் கேட்டுக்கொண்டார்.

மாரத்தான் ஓட்டத்தில் மாண­வர்­கள், தன்­னார்­வ­லர்­கள், பொது­மக்­களில் பலரும் பங்­கேற்­ற­னர்.