ரூ.5 கோடி பணம் கேட்டு
கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்-கவிதா தம்பதியின் மகன் அஜய் பிரணவ், 14. இவர், 10ஆம் வகுப்பில் படித்து வந்த நிலையில், திடீரென்று கடத்தப்பட்டார்.
கணக்காளராகப் பணியாற்றி வரும் சிவக்குமாருக்கும் கட்டட குத்தகையாளர் ராகேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட முன் பகையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மகனைக் கடத்தி, மிரட்டியதாக ராகேஷ் மீது காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் விடுதியில் தங்கியிருந்த ராகேஷ் உயிரை மாய்த்துக்கொண்டார். சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார். காவலர்களுக்குப் பயந்து ராகேஷ் உயிரை விட்டது தெரியவந்தது.
சென்னை வந்த அமெரிக்க கப்பல்
இந்திய கடலோரக் காவல்படையினருடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக அமெரிக்க கடலோரக் காவல் படையின் 'மிட்ஜெட்' கப்பல் நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. 418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்ட இக்கப்பலுடன் 23 அதிகாரி கள், 120 மாலுமிகளும் வந்துள்ளனர். மிட்ஜெட் கப்பலுக்கு இருநாட்டுக் கொடிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்

