உடலுறுப்பு தானம்: நால்வர் மறுவாழ்வு

உடலுறுப்பு தானம்: நால்வர் மறுவாழ்வு

1 mins read
17186b6e-3fe2-4f4f-b86d-13decf98761a
-

கோவை: கோவையில் வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானத்தால் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஓட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த 43 வயது ஆடவர் ஒருவர், கடந்த 13ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்தனர். அவரது இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் ஆகியவை கோவை, சேலம் மருத்துவ மனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன.