சிறுநீரக நோய் வராமல் தடுக்க நடவடிக்கை

சிறுநீரக நோய் வராமல் தடுக்க நடவடிக்கை

1 mins read
138ed188-30c5-483a-b408-01757a93ec72
-
Google News Preferred Icon

சென்னை: காவலர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களுக்கும் 'டேங்கர் அறக்கட்டளை' மூலம் ரத்த அழுத்தமானி நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து, இந்த அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டும் நோக்கில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் இப் போட்டியைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தொடங்கிவைத்தார்.

"இதுவரை 550 காவல் நிலையங்களில் ரத்த அழுத்தமானி கருவிகள் உள்ளன. காவலர்கள் பாதுகாப்புப் பணியை முடித்தபின்னர், பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்," என்றார் அவர்.