சென்னை-திருப்பதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: சென்­னை­யில் இருந்து திருப்­பதி செல்­லும் பக்­தர்­கள், பொது­மக்­கள் கோரிக்­கையை ஏற்று அதி­வேக ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்­தது.

இதன்­படி சென்­னை­யில் இருந்து அரக்­கோ­ணம் வழி­யாக ரேணி­குண்­டா­வுக்கு 145 கி.மீ. வேகத்­தில் செல்ல ரயில் சோதனை ஓட்­டம் நேற்று நடை­பெற்­றது.

திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவி­லுக்­குச் செல்­லும் பக்­தர்­கள் சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து திருப்­பதி செல்­லும் ரயி­லில் பய­ணம் செய்து வரு­கின்­ற­னர்.

கொவிட்-19 தொற்று ஊர­டங்­கின்­போது இந்த ரயில் நிறுத்­தப்­பட்­டது. தற்­போது தொற்று குறைந்­துள்ள நிலை­யில் சென்னை-திருப்­பதி ரயிலை இயக்க வேண்­டும் என்று பய­ணி­கள் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

அதை ஏற்று சென்னை சென்ட்­ரல்-அரக்­கோ­ணம் மின்­சார ரெயில் (06727) நீட்­டிப்பு செய்­யப்­பட்டு சென்னை-திருப்­பதி இடையே முன்­ப­திவு இல்­லாத விரைவு ரயி­லாக கடந்த 13ஆம் தேதி முதல் இயக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்த நிலை­யில் சென்­னை­யில் இருந்து சென்னை-திருப்­பதி அதி­வேக ரயி­லுக்­கான சோதனை ஓட்­டம் நடை­பெற்­றது.

இந்த ரயில் சென்­னை­யில் இருந்து அரக்­கோ­ணம் வழி­யாக ரேணி­குண்­டா­வுக்கு 145 கி.மீ. வேகத்­தில் செல்­லும். இந்தச் சேவை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து தகவல் இல்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!