'வேறு கட்சிக்குச் செல்ல மாட்டேன்'

'வேறு கட்சிக்குச் செல்ல மாட்டேன்'

2 mins read
038ffae5-db54-4a4c-b995-dbb0e3769306
கட்சியில் ஒத்துழைப்பு இல்லாததால் சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

திமுகவிலிருந்து விலகுவதாக மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு

சென்னை: திமு­க­வில் உட்­கட்­சித் தேர்­தல் நடை­பெற்று வரும் வேளை­யில் அக்­கட்­சி­யி­லி­ருந்து மூத்த தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­சன் பதவி வில­கி­யி­ருக்­கி­றார்.

திமுக துணைப் பொதுச் செய­லா­ளர் பத­வி­யி­லி­ருந்­தும் வில­கு ­வ­தா­க­ அ­வர் அறி­வித்­துள்­ளார்.

அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெற வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் வில­கி­ய­தாக கட்­சித் தலை­மைக்கு அனுப்­பிய கடி­தத்­தில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"கடந்த சில நாட்­க­ளா­கவே எனது பதவி விலகல் குறித்து வெவ் வேறு ஊகத் தக­வல்­கள் வெளி­யா­யின. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வகை­யில் இன்று நான் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளேன். அதில் அர­சி­ய­லில் இருந்து ஓய்வுபெற வேண்­டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்­செ­ய­லா­ளர் பத­வி­யில் இருந்­தும் கட்­சி­யில் இருந்­தும் வில­கி­ய­தாக கடந்த ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியே கட்சி தலை­ வருக்கு கடி­தம் அனுப்பி உள்­ளேன். நான் பெரி­யார் கருத்­து­களை முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்டு உள்­ளேன்," என்று சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­சன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த சட்­ட­மன்ற தேர்­த­லில் யாரும் எதிர்­பா­ராத வகை­யில் மொடக்­கு­றிச்சி தொகுதி வேட்­பா­ள­ராக சுப்­பு­லட்சுமி ஜெ­க­தீ­சன் அறி­விக்­கப்­பட்­டார். இத­னால் கட்சி நிர்­வா­கி­கள் முதல் தொண்­டர்­கள் வரை அதிர்ச்சி அடைந்­த­னர்.

பா.ஜனதா வேட்­பா­ள­ரான சரஸ்­வ­தி­யி­டம் 206 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் அவர் தோல்வி அடைந்­தார். கட்­சி­யி­னர் முழு ஒத்­து­ழைப்பு அளிக்­கா­த­தால் தோல்­வியை தழு­வி­ய­தாக அவர் புகார் எழுப்­பி­யி­ருந்­தார். இது குறித்து இரு ஒன்­றிய செய­லா­ளர்­கள் மற்­றும் ஒரு முக்­கிய நிர்­வாகி மீது கட்சித் தலை­மை­யி­டம் அவர் புகார் செய்­தார். ஆனால் எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதற்­கி­டையே அண்­மைய உட்­கட்சித் தேர்­த­லில் சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­சன் புகார் செய்த இரண்டு ஒன்­றியச் செய­லா­ளர்­க­ளுக்கு மீண்­டும் பதவி வழங்­கப்­பட்­ட­தால் அதிர்ச்­சி­ய­டைந்­தார். வாக்கு எண்­ணிக்­கை­யில் சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­சனே முன்­னிலை வகித்­து­வந்த நிலை­யில் திமு­க­வுக்கு விழுந்த அஞ்சல் வாக்­கு­கள் செல்­லா­தவை என்று அறி­விக்­கப்­பட்­ட­தால் குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் சுப்­பு­லட்­சுமி வெற்றி வாய்ப்பை இழந்­தார்.

திமு­க­வுக்கு விழுந்த அஞ்சல் வாக்­கு­கள் செல்­லாது என்று தேர்­தல் அதி­கா­ரி­கள் அறி­வித்­த­போது சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­ச­னுக்கு ஆத­ர­வாக நிர்­வா­கி­கள் யாரும் குரல் கொடுக்­க­வில்லை. அப்­போதே அவர் மனம் உடைந்துவிட்­டார்.

சுப்­பு­லட்­சுமி ஜெக­தீ­ச­னின் பதவி வில­கல் ஏற்­கப்­படும் பட்­சத்­தில் அந்த இடம் காலி­யா­கும். அடுத்த மாதம் நடை­பெற உள்ள திமுக பொதுக்­குழுக் கூட்­டத்­தில் புதிய துணைப் பொதுச் செய­லா­ளர் ஒரு­வர் தேர்வு செய்­யப்­ப­டு­வார் எனத் தெரி­கிறது.