மியன்மாரில் தவிக்கும் தமிழர்களை மீட்க கமல், சீமான் வலியுறுத்து

மியன்மாரில் தவிக்கும் தமிழர்களை மீட்க கமல், சீமான் வலியுறுத்து

1 mins read
380d01f8-ca4f-4d13-8a9f-e3a9e0250719
-

சென்னை: மியன்­மா­ரில் சிக்­கித் தவிக்­கும் தமி­ழர்­களை மீட்க வேண்­டும் என்று அர­சாங்­கத்தை கமல்­ஹா­சன், சீமான் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இது குறித்து மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலை­வர் கமல்­ஹா­சன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், தாய்­லாந்து நாட்­டிற்கு வேலை தேடிச்சென்ற தமி­ழக இளை­ஞர்­கள் உட்­பட இந்­தி­யர்­களை மியான்மார் நாட்­டுக்கு கடத்­திச் சென்று, சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் ஈடு­ப­டுத்தி, கொடு­மைப்­ப­டுத்­து­வ­தாக வெளி­யான தக­வல் அதிர்ச்சி அளிக்­கிறது. அவர்­களை உட­ன­டி­யாக மீட்க மத்­திய அரசு துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாம் தமி­ழர் கட்சி வெளி­யிட்ட அறிக்­கை­யில், வெளி­நாட்டு வேலை என்று கூறி அழைத்­துச் செல்­லப்­பட்டு ஏமாற்­றப்­பட்ட தமி­ழர்­கள், இந்­தி­யர்­கள் மியன்­மா­ரில் உள்ள சிறை­யில் சிக்­கித் தவிக்­கும் காணொளி அதிர்ச்­சி­ய­ளிக்­கிறது. அவர்­களை மீட்க தூத­ர­கம் மூலம் இந்­திய அரசு விரை­வான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும், தமிழர்­கள் மீட்­கப்­பட்டு அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப் ­ப­டு­வதை தமிழ்­நாடு மற்­றும் புதுச்­சேரி மாநில அர­சு­கள் தொடர்ந்து கண்­கா­ணித்து உறுதி செய்ய வேண்­டும் என்று தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் தெரி­வித்­துள்­ளார்.