புதுடெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி; அமித்ஷாவிடம் தமிழக அரசு மீது புகார்

புதுடெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி; அமித்ஷாவிடம் தமிழக அரசு மீது புகார்

2 mins read
6a8b782b-d57a-4cab-af0a-00a8246421b2
-

சென்னை: புது­டெல்­லிக்கு திடீர் பய­ணம் மேற்­கொண்ட அதி­முகவின் இடைக்­காலப் பொதுச் செய­லா­ள­ரும் முன்­னாள் முதல் ­வ­ரு­மான எடப்­பாடி பழ­னி­சாமி, மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவைச் சந்­தித்து தமி­ழக அரசு மீது அடுக்­க­டுக்­காக புகார் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஜூன் மாதத்­தில் இருந்தே அதி­மு­க­வில் ஒற்றைத் தலைமை விவ­கா­ரத்­தால் உட்­கட்சி பூசல் நிலவி வரு­கிறது. தமி­ழக பாஜக இதில் பெரி­தாகத் தலை­யி­ட­வில்லை. ஆனா­லும் டெல்லி மேலி­டம் அதி­மு­க­வில் நடக்­கும் போட்­டியை உற்­றுக் கவ­னித்தே வரு­கிறது.

இந்த நிலை­யில், எடப்­பாடி பழனி ­சாமி திங்­கள் இரவு டெல்லி புறப்­பட்­டுச் சென்­றார். அவ­ரு­டன் சிவி. சண்­மு­கம், எஸ்.பி.வேலு­மணி ஆகி­யோ­ரும் சென்­றனர்.

நேற்­றுக் காலை 11.30 மணி அள­வில் மத்­திய அமைச்­சர் அமித்­ஷாவை எடப்­பாடி பழ­னி­சாமி சந்­தித்து பேசி­னார். சுமார் 20 நிமி­டங்­கள் அவர்­கள் பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து பேசி­னர்.

பிறகு எடப்­பாடி பழ­னி­சாமி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­தார்.

"நானும் வேலு­மணி, சி.வி. சண்­மு­கம் ஆகி­யோ­ரும் மரி­யாதை நிமித்­த­மாக அவ­ரைச் சந்­தித்­தோம்.

"தமி­ழ­கம் முழு­வ­தும் தடை­யின்றி போதைப்­பொ­ருள் கிடைக்­கிறது. இத­னால் மாண­வர்­கள், இளை­யர்­கள் சீர­ழி­யக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

"இதை ஏற்கெ­னவே நான் பல­முறை சட்­ட­மன்­றத்­தில் முதல்­வ­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றேன். அறிக்­கை­கள் கொடுத்­தோம். ஆனால் அதற்கு உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

"எனவே மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். சட்­டம்-ஒழுங்கை பாது­காக்க வேண்­டி­யது மாநில அர­சின் கடமை. எங்கே போதைப் பொருள் விற்­றா­லும் அண்டை மாநி­லத்­தில் இருந்து தமி­ழ­கத்­துக்கு வந்­தா­லும் அதை தடுத்து நிறுத்தி சட்ட ரீதி­யாக போதைப் ­பொ­ருள் விற்­பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். ஆனால் தமிழக அரசு மெத்­த­ன­மாக அலட்­சி­ய­மாக இருக்­கின்ற கார­ணத்­ தினால் தமிழ்­நாடு முழு­வ­தும் கஞ்சா விற்­பனை அமோ­க­மாக நடை­பெறு கிறது.

"கொரோ­னா­வால் 2 ஆண்டு களாக வேலை­வாய்ப்பு இல்­லா­மல் பொரு­ளா­தார சூழ்­நிலை மந்­த­மாக இருக்­கிறது. வாழ்­வ­தற்கே போரா­டிக்கொண்­டி­ருக்­கும் இந்­தத் தரு­ணத்­தில் மின்­சா­ரக் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது," என்று அவர் ஆவே­சத்­து­டன் சொன்­னார்.

தான் முதல்­வ­ராக இருந்­த­போது கோதா­வரி-காவிரி இணைப்புத் திட்­டத்­தை­யும் அம்­மா­வின் அரசு இருந்­த­போது பிர­த­ம­ரி­டம் 'நடந்­தாய் வாழி காவிரி' என்ற மற்­றொரு திட்­டத்­தை­யும் தமி­ழ­கத்­தில் நிறை வேற்ற வேண்­டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறிய எடப் பாடி பழனிசாமி, இவற்றை நிறை­வேற்ற வேண்­டும் என்­று அமித்­ஷா­வை கேட்­டுக் கொண்­ட­தா­கவும் கூறினார்.