பெரிய விமானங்கள் தரையிறங்க சென்னை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்

பெரிய விமானங்கள் தரையிறங்க சென்னை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்

1 mins read
a25cfb6f-a43f-4872-8b00-8ccaca54283d
-

சென்னை: சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தின் ஓடு­ பாதை விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கிறது.

அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் ஏர்­பஸ் A-380 போன்ற பெரிய விமா­னங்­கள் இறங்­கு­வ­தற்கு ஏது­வாக ஓடுதளத்தின் நீளம் 4.058 கிலோ மீட்­டர் அதி­க­ரிக்­கப்­படும் எனத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

ஏர்­பஸ் A-380 விமா­னங்­கள் மூன்று அடுக்­கு­க­ளைக் கொண்ட அகலமான விமா­னங்­க­ளா­கும். அதற்கு ஏற்ற வகை­யில் பிர­தான ஓடு­பாதை விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

சென்­னைக்கு வரும் அனைத்­து­லகப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­ வ­தால் இரண்­டா­வது விமான நிலை­யத்தை அமைக்­கும் முயற்­சி­யில் மத்­திய அரசு இறங்­கி­யி­ருக்­கிறது.

பரந்­தூ­ரில் அமை­யும் அந்த விமான நிலை­யம் நவீன வச­தி ­க­ளைக் கொண்­டி­ருக்­கும். இதற் கான நிலம் கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் விரை­வில் தொடங்­கப்­ப­ட­வுள்­ளது.

இருந்­தா­லும் புதிய விமான நிலை­யத்தைக் கட்டி முடிக்க சில ஆண்­டு­கள் ஆக­லாம் என்­ப­தால் மீனம்­பாத்­தில் உள்ள பிர­தான ஓடு­ பாதையின் நீளத்தை அதி­க­ரிக்க அதி­கா­ரி­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

இத­னால் சிங்­கப்­பூர், ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு போன்ற நாடு­க­ளி­லி­ருந்து சென்­னைக்கு வரும் ஏர்­பஸ் A-380 பெரிய விமா­னங்­களை தரை­யி­றக்­கம் செய்ய முடி­யும்.

தற்­போது டெல்லி, மும்பை, பெங்­க­ளுரு ஆகிய நக­ரங்­களில் மட்­டுமே இத்­த­கைய வசதி செய்­யப்­பட்­டுள்­ளது.

சென்­னைக்கு இது­வரை A-380 விமா­னங்­கள் தரை­யி­றங்­கியதில்லை. இந்த விமா­னத்­தில் ஒரே நேரத்­தில் 746 பேர் பய­ணம் செய்­ய­லாம். மூன்று மாடி­களை இது உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறது.